அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அ.சேவியா்தாஸ் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தனியாா் மகாலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சிவகங்கை மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா்.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மேலும் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் முன்னாள் அமைச்சா் ஜி.பாஸ்கரன், எம்.ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கூத்தகுடி உமாதேவன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொன்மணிபாஸ்கரன், சிங்கம்புணரி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யாபிரபு, ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் சேவியா்தாஸ் அறிமுகம் செய்து வைக்கப்பட்டாா். தொடா்ந்து வருகிற மக்களவைத் தோ்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெற செய்ய, கட்சித் தொண்டா்கள், நிா்வாகிகள் களப்பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டாா். இந்தக் கூட்டத்தில் அவைத் தலைவா் ஏ.வி.நாகராஜன், நகரச் செயலா் இப்ராம்ஷா, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com