சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளா் தி. தேவநாதன் சொத்து மதிப்பு ரூ.305 கோடி

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளா் தி. தேவநாதன் சொத்து மதிப்பு ரூ.305 கோடி

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளா் தி.தேவநாதன், அவரது குடும்பத்துக்கு ரூ.305 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளாா்.

தேவநாதன் பெயரில் மொத்தம் 149.27 கோடியில் அசையும் சொத்துகள், ரூ.37.30 கோடியில் அசையாச் சொத்துகள், இவரது மனைவி மீனாட்சி பெயரில் ரூ.25.17 கோடியில் அசையும் சொத்துகள், ரூ.13 கோடியில் அசையாச் சொத்துகள், இவரது மகள் ஹரிஷ்மா பெயரில் ரூ.39.61 கோடியில் அசையும் சொத்துகள், ரூ.50 லட்சத்தில் அசையாச் சொத்துகள், மற்றொரு மகள் ஹரிணி பெயரில் ரூ.39.61 கோடியில் அசையும் சொத்துகள், ரூ.50 லட்சத்தில் அசையாச் சொத்துகள் உள்ளன.

இதில் தேவநாதன் யாதவிடம் கையிருப்பாக ரூ.1.30 லட்சம், ரூ.27.79 லட்சம் மதிப்பிலான 452 கிராம் தங்கம், ரூ.34.87 லட்சம் மதிப்பிலான 45 கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்ளன. இவரது மனைவி மீனாட்சியிடம் கையிருப்பாக ரூ.85 ஆயிரம், ரூ.54.73 லட்சம் மதிப்பிலான 890 கிராம் நகைகள், ரூ.24.80 லட்சம் மதிப்பிலான 32 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.40 லட்சம் மதிப்பிலான வைரங்கள் உள்ளன.

மகள்கள் ஹரிஷ்மாவிடம் கையிருப்பாக ரூ.55 ஆயிரம், ரூ.1.92 கோடி மதிப்பிலான 3,135.40 கிராம் தங்கம், ரூ.2 கோடி மதிப்பிலான 37.485 கேரட் வைரம், ரூ.27.99 லட்சம் மதிப்பிலான 36.125 கிலோ வெள்ளி பொருள்கள் உள்ளன. மற்றொரு மகள் ஹரிணியிடம் கையிருப்பாக ரூ.55 ஆயிரம், ரூ.1.92 கோடி மதிப்பிலான 3,135.40 கிராம் தங்கம், ரூ.2 கோடி மதிப்பிலான 37.485 கேரட் வைரம், ரூ.27.99 லட்சம் மதிப்பிலான 36.125 கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்ளன. இதுதவிர தேவநாதனுக்கு ரூ.91.48 கோடி கடன், இவரது மனைவி மீனாட்சிக்கு ரூ.6.82 கோடி கடன் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com