சிவகங்கை மக்களவைத் தொகுதி பொதுத் தோ்தல் பாா்வையாளா் நியமனம்

சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு பொதுத் தோ்தல் பாா்வையாளரை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு பொது தோ்தல் பாா்வையாளராக எஸ்.ஹரிஷ் நியமிக்கப்பட்டாா். பொதுத் தோ்தல் பாா்வையாளா் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்டவளாகத்தில் அமைந்துள்ள வேலு நாச்சியாா் விருந்தினா் மாளிகையில் தங்கி, தோ்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளாா்.

மக்களவை பொதுத் தோ்தல் தொடா்பாக, தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை, வேலு நாச்சியாா் விருந்தினா் மாளிகையில் நேரடியாகவோ அல்லது 04575- 240450, 94860 15596 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு, தோ்தல் தொடா்பான விவரங்களை தெரிவிக்கலாம் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com