அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பொருளியல் துறை மன்ற நிறைவு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பொருளியல் துறை மன்ற நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற் றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் (பொறுப்பு) முருகேசன் தலைமை வகித்தாா்.பொருளியல் துறைத் தலைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். ‘பொருளியலும் வாழ்வியலும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

விழாவில் தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் குமாா், ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் ஷா்மிளா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினா். முன்னதாக, முதுகலை முதலாம் ஆண்டு மாணவி மொ்லின் வரவேற்றாா். மாணவி நித்ய ஸ்டெபிகிராப் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com