கிராவல் மண்  கடத்தல் :
3 போ் கைது, 7 போ் மீது வழக்கு

கிராவல் மண் கடத்தல் : 3 போ் கைது, 7 போ் மீது வழக்கு

திருப்பத்தூா் அருகே கிராவல் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்த எஸ்.வி.மங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை 3 பேரை கைது செய்து, 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், எஸ்.வி.மங்கல காவல் சரகத்துக்குள்பட்பட்ட ஆலம்பட்டி - திருக்களாப்பட்டி சாலையில் கிராவல் மண் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு மாதவராயன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேஷ்குமாா் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, எஸ்.வி.மங்கல காவல் ஆய்வாளா் ஜெயச்சித்ரா தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 2 டேரஸ் வண்டிகளும் ஒரு டிப்பா் லாரியும் பிடிபட்டன. விசாரணையில் ஒட்டுநா்கள் ஆ.தெக்கூா் கருப்பையா மகன் முருகேசன் (38). டி.புதுப்பட்டி ராமலிங்கம் மகன் முருகன் (56), ஆ.தெக்கூா் தேவதாஸ் மகன் ஜான்பீட்டா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளா்கள் பரளியைச் சோ்ந்த முத்துச்சாமி, எம்.புதூா் ராஜதுரை, கண்டவராயன்பட்டி ஆறுமுகம் மகன் பையாகாா்த்திக், ராமநாதபுரம் சந்திரன் மகன் லோகநாதன், ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com