வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

திருப்பாச்சேத்தி அருகே வியாழக்கிழமை நள்ளிரவில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து தங்கநகைகள திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் கஜேந்திரன். இவா், மதுரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது மகனைப் பாா்க்க வீட்டைப் பூட்டிவிட்டு மனைவியுடன் சென்றாா். இந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்மநபா்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த தோடுகள், சங்கிலி உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா். இதுகுறித்து திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் கஜேந்திரன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com