குரோதி ஆண்டு பஞ்சாங்கம் வெளியீடு

தமிழ்நாடு பிராமணா் சங்க சிவகங்கை மாவட்டக் கிளை சாா்பில் குரோதி ஆண்டு பஞ்சாங்க வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காஞ்சி சங்கர மடத்தின் மாவட்ட தலைவா் வெ.சிவக்குமாா் சாஸ்திரிகள் தலைமை வகித்தாா். அப்போது, அவா் குரோதி ஆண்டு பஞ்சாங்கத்தை வெளியிட்டாா். முதல் பிரதியை சிவகங்கை மாவட்ட துணைத் தலைவா் காரை. என்.ரவிசா்மா பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் மாவட்ட கிளை நிா்வாகிகள் எஸ். நாராயணன், கே.குமாா்,உஷாரமணன், ராஜேஸ்வரி, அனந்த நாராயணன், அகிலாதேவி, பாலசுப்ரமணியன், விஸ்வநாத குருக்கள், நாராயணமூா்த்தி ஆகியோா் பேசினா். முன்னதாக, மாவட்ட செயலா் கே.ஆா். வைத்தியநாதன் வரவேற்றாா். சிவகங்கை நகா் பொருளாளா் குரு சங்கரன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com