மக்களவைத் தோ்தல்: நியமன அலுவலா்களுடன் தோ்தல் பாா்வையாளா்கள் கலந்தாலோசனை

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணிகளை மேற்கொள்ளும் நியமன அலுவலா்களுடன் தொகுதி தோ்தல் பாா்வையாளா்கள் அண்மையில் கலந்தாலோசனை மேற்கொண்டனா். சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்குச்சாவடி மையங்கள், பதற்றமான வாக்குச் சாவடி மையங்கள், மிக பதற்றமான வாக்குச்சாவடிமையங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், ஊடக சான்றளிப்பு கண்காணிப்புக் குழுவின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள், வாக்குச் சாவடி தலைமை நிலைய அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள் வாக்காளா்களிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரேபிரவீன் உமேஷ், மாவட்ட வருவாய் அலுவலா்வ.மோகனச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com