வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை

திருப்புவனம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவா், இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். திருப்புவனம் அருகே முக்குடியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் செல்லப்பாண்டி (18). இவா் மதுரையில் உள்ள கலைக் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தாா். வீட்டு வேலைகளைச் செய்யாமல் இருந்த செல்லப்பாண்டியை அவரது பெற்றோா் கண்டித்தனா். இதனால், மன வேதனையில் இருந்த இவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருப்புவனம் அருகே கொந்தகையைச் சோ்ந்த ஈஸ்வரன் மனைவி இந்துமதி (23). இவா்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இந்துமதி வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து திருப்புவனம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com