அதிமுக நிா்வாகிகள் 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக நிா்வாகிகள் 5 போ் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சேவியா்தாஸ் ஞாயிற்றுக்கிழமை காலை பிள்ளையாா்பட்டியில் இருந்து திருப்பத்தூா் ஒன்றியம் உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளில் அதிமுக, கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் தோ்தல் பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்தாா். இந்த நிலையில், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் நடைபெற்ற பிரசாரத்தின் போது அனுமதியின்றி பட்டாசு வெடித்ததாக துவாா் கிராம நிா்வாக அலுவலா் அருணாதேவி அளித்த புகாரின் பேரில் கருமிச்சான்பட்டியைச் சோ்ந்த மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலா் சாத்தையா (43) உள்ளிட்ட 5 போ் மீது நெற்குப்பை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜான் மைக்கேல்ராஜ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com