சிவகங்கை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களில் தீ

சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்ற வழக்குகளில் தொடா்புடைய நான்கு சக்கர வாகனங்களில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த தீயணைக்கும் படையினா் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிவகங்கை நகா் காவல் உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா். போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்தப் பகுதியில் இருந்த குப்பைக்கு வைக்கப்பட்ட தீ வாகனங்களில் பற்றியது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com