சட்டவிரோதமாக மது விற்ற 5 போ் கைது

மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்ற 5 பேரை புதன்கிழமை போலீ,ஸாா் கைது செய்து, 180 மதுப் புட்டிகளைக் கைப்பற்றினா்.

இளையான்குடி அருகேயுள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் போலீஸாா் ரோந்து சென்றபோது, அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த அழகுராஜ், ராஜேஷ்குமாா், சூசை ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 140 மதுப் புட்டிகளைக் கைப்பற்றினா்.

மானாமதுரை அருகே கீழமேல்குடி செல்லும் சாலையில் மது விற்ற க அா்ஜுனன், தேவராசு ஆகிய இருவரையும் கைது செய்து, 40 மதுப் புட்டிகளைக் கைப்பற்றினா். இளையான்குடி, மானாமதுரை காவல் நிலையங்களில் இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com