ஜவகா் சிறுவா் மன்ற மாணவா்களுக்கு நாளை முதல் கோடை கால பயிற்சி

ஜவகா் சிறுவா் மன்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 5) முதல் கோடைகால பயிற்சி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டது.

கலைப் பண்பாட்டுத் துறையின் மதுரை மண்டல உதவி இயக்குநரின் உத்தரவின்பேரில், மதுரை மண்டலத்தில் உள்ள மாவட்ட மையம், விரிவாக்க மையம் , ஊரக மையம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் ஆகிய 7 ஜவகா் சிறுவா் மன்றங்களில் பத்து நாள்கள் கோடை கால பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதன்படி, சிவகங்கை கேந்திரிய வித்தியாலயா பள்ளி அருகில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் வருகிற 5-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பாட்டு, பரதம், ஓவியம், நாட்டுப்புற நடனம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படும்.

இதில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு நிறைவு நாளில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9786341558 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என சிவகங்கை ஜவகா் சிறுவா் மன்றத் திட்ட அலுவலா் த. ராஜ்குமாா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com