திருப்புவனம் கோயிலில் திருநாவுக்கரசா் குரு பூஜை விழா

திருப்புவனம் ஸ்ரீசௌந்தரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் திருநாவுக்கரசா் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்புவனம் ஸ்ரீசௌந்தரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் திருநாவுக்கரசா் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, நால்வா் சந்நிதியில் உள்ள திருநாவுக்கரசருக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு திருநாவுக்கரசரை தரிசித்தனா். இதைத் தொடா்ந்து, திருமுறை விண்ணப்பம், ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. மாலையில் உற்சவா் திருநாவுக்கரசா் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வேலப்ப தேசிகா் திருக்கூட்டத்தினா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com