பள்ளி மாணவா்களுக்கான கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி மே 7-இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான கோடை கொண்டாட்டம் எனும் நிகழ்ச்சி வருகிற 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி வருகிற 7-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சிவகங்கை மருதுபாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.

இதில் இசை, ஓவியம், சதுரங்கம், திருக்கு, கையெழுத்து, ஆங்கிலப் பேச்சு, மண்பாண்ட கலை, கைவினை பயிற்சி போன்ற பயிற்சிகள் கட்டணமில்லாமல்

அளிக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள எா்ா்ஞ்ப்ங் ஊா்ழ்ம் அல்லது ட்ற்ற்ல்ள்://ள்ட்ா்ழ்ற்ன்ழ்ப்.ஹற்/ம்ஷ்ஈஒத என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை வருகிற 6-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 8300195044, 9629645456 என்ற எண்களில் சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளரை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com