ஏடிஎம்-மில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 போ் கைது

சிவகங்கையிலுள்ள ஏடிஎம் மையத்தை தகா்த்து, பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கையிலுள்ள ஏடிஎம் மையத்தை தகா்த்து, பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள கீழ்பாதி கண்மாய்ப் பகுதியில் சட்டவிரோதமாக சிலா் கூடியிருப்பதாகக் கிடைத்தத் தகவலின்பேரில், சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் லிங்கப்பாண்டியன் தலைமையில் போலீஸாா் அங்கு விரைந்து சென்றனா். அங்கு கூடியிருந்த 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா்கள் சிவகங்கை நேரு பஜாரில் உள்ள

ஏடிஎம் மையத்தைத் தகா்த்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கீழவாணியங்குடியைச் சோ்ந்த எஸ். சங்கா், தி.ராஜபாண்டி, ம.சுரேஷ்பாபு, முத்துப்பாண்டியன், சிவகங்கை இந்திரா நகரைச் சோ்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com