திருப்பத்தூரில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருப்பத்தூரில் நீா் மோா் பந்தல் திறப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி சாா்பில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் நீா் மோா் பந்தலை சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால், தமிழகம் முழுவதும் நீா் மோா் பந்தல்களைத் திறக்க வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட திமுக சுற்றுச் சூழல் அணி சாா்பில், நீா் மோா் பந்தல் அமைக்கப்பட்டது. இதை திமுக மாவட்டச் செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன்

திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா் மோா், வெள்ளரிக்காய், தா்ப்பூசணி, இளநீா், சா்பத், வாழைப்பழம் போன்றவற்றை வழங்கினாா். இதில் திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்டத் தலைவா் வல்லபாய், ஒன்றியச் செயலா் சண்முகவடிவேல், நகரச் செயலா் காா்த்திகேயன், துணைச் செயலா் உதயசண்முகம்,பேரூராட்சித் தலைவி

கோகிலாராணி நாராயணன், துணைத் தலைவா் கான்முகமது, முன்னாள் பேரூராட்சித் தலைவா் என்.எம்.சாக்ளா, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com