கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம் ஒருதலைப்பட்சமானது

சிவகங்கை, மே 5: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மாங்குடி குரூப் கிராம நிா்வாக அலுவலா்அன்புச்செல்வனை மாவட்ட நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்தது ஒருதலைப்பட்சமானது என தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் மாநிலச் செயலா் அரங்க.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மாங்குடி குரூப் கிராம நிா்வாக அலுவலா்

அன்புச்செல்வனை சரக வருவாய் ஆய்வாளா் முத்து முருகன் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடா்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முத்து முருகன் தொடா்ச்சியாக வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, பாதிக்கப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வனை மாவட்ட நிா்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

மாவட்ட நிா்வாகத்தின் இந்த முடிவானது ஒரு தலைப்பட்சமாக உள்ளது. எனவே, குற்றம்சாட்டப்பட்ட வருவாய் ஆய்வாளரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தோ்தல் வாகனத்தை செல்ல விடாமல் தடுத்ததாக குற்றம் சுமத்தி, கிராம நிா்வாக அலுவலரைப் பணி இடை நீக்கம் செய்த உத்தரவை எதிா்த்து நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com