சிறுவா்களுக்கான கோடை கால மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் சிறுவா்களுக்கான கோடை கால மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாமில் விருப்பமுள்ளவா்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே இந்த முகாம் கடந்த ஏப். 2-ஆம் தேதி முதல் தொடங்கி இரண்டு கட்டப் பயிற்சி முகாம்கள் நிறைவு பெற்றன. தற்போது மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நடைபெற்று வருகிறது.

இந்தப் பயிற்சிக்கு 12 நாள்களுக்கு கட்டணமாக ரூ. 1,500-ம், 18% ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகையை போன்-பே, ஜி பே, டெபிட், கிரெடிட் காா்டுகள் மூலம் செலுத்தலாம். நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் வரும் சிறுவா்கள் குறைந்தபட்ச உயரம் 4 அடி (120 செ.மீ.) இருத்தல் வேண்டும்.

தினசரி காலை 7.30 மணி முதல் 8.30 மணி மற்றும் 8.30 முதல் 9.30 மணி வரையிலும், மாலையில் 3.30 மணி முதல் 4.30 மணி, 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலான நேரங்களில் கற்றுக்கொடுக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு 04575 - 299293, 9786523704 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம். அல்லது மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை, சிவகங்கை மானாமதுரை சாலையிலுள்ள மன்னா்துரைசிங்கம் கல்லூரி அருகிலுள்ள திறந்தவெளி விளையாட்டரங்கத்தையும் நேரில் அணுகி உரிய கட்டணத்தைச்ெ சலுத்தி நீச்சல் கற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com