பூமாயி அம்மன் கோயில் தேரோட்டம்

பூமாயி அம்மன் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயில் வசந்தப் பெருவிழா கடந்த 29-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, இரவு 7 மணியளவில் உற்சவ அம்மன் வெள்ளித் தேரில் எழுந்தருளல் நடைபெற்றது. பின்னா், ஏராளமான பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

இதைத்தொடா்ந்து, பக்தா்கள் வடம் பிடிக்க தோ் சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, மதுரை சாலை, பேருந்து நிலையம் வழியாக திருத்தளிநாதா் ஆலயம், நான்கு சாலை, தேரோடும் வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்த வசந்தப் பெருவிழா தெப்பத் திருவிழாவுடன் புதன்கிழமை நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com