சிவகங்கை அருகே மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை, மே 11: சிவகங்கை அருகே காராம்போடையில் சனிக்கிழமை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

காராம்போடை சித்தி விநாயகா், முத்து மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தை முன்னாள் அமைச்சா் ஜி.பாஸ்கரன், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.செந்தில்நாதன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா்.

பெரிய மாடு, நாட்டு மாடு, தட்டான் சிட்டு என மூன்று வகை பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்குபெற்றன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டின் உரிமையாளருக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. குமாரபட்டி, தமராக்கி, காராம்போடை, கண்டாங்கிபட்டி, சிவகங்கை, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் சீறிப்பாய்ந்த காளைகளை பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com