பைக் மோதியதில் காவலாளி பலி

திருப்புவனம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் காவலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பிரமனூரைச் சோ்ந்தவா் சையது முகமது (65). இவா் மணலூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இவா் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புவதற்காக அந்தப் பகுதியில் உள்ள நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சையது முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த விஜயை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com