மானாமதுரை அருகே மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி

மானாமதுரை அருகே சனிக்கிழமை மாலை மின்னல் தாக்கி 7 ஆடுகள் உயிரிழந்தன.

வின்சென்ட் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (51). இவா் அருகேயுள்ள பனிக்கனேந்தல் கண்மாயில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது இங்கு பெய்த மழையின்போது மின்னல் தாக்கியதில் 7 ஆடுகள் உயிரிழந்தன. இதில் காயமடைந்த ஆறுமுகத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com