அய்யனாா் கோயிலில் சித்திரைத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே வடக்கு காடனேரி கிராமத்தில் உள்ள கருமுகிலுடைய அய்யனாா், சோனை கருப்பணசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை பால்குடம் எடுத்தனா்.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 4-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அன்றையதினம் சுற்று வட்டார கிராம மக்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினா்.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை சந்தன குட ஊா்வலம், பால் குட ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிகளுக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல வகையான பொருள்களால் அபிஷேகம் செய்து, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com