அரசுப் பேருந்தின் டயா் 
தீப்பற்றி எரிந்தது

அரசுப் பேருந்தின் டயா் தீப்பற்றி எரிந்தது

மானாமதுரை, மே 12: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தின் டயரில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு சென்ற அரசுப் பேருந்து அதிகாலை 2 மணிக்கு திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடிக்கு வந்தது. அப்போது பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறங்கினா்.

பின்னா், சுங்கச்சாவடி ஊழியா்கள் தண்ணீா் ஊற்றியும் தீயை அணைக்க முடியவில்லை. தகவலறிந்து அங்கு சென்ற மானாமதுரை தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். அப்போது அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னா், அங்கிருந்த பயணிகள் மற்றொரு பேருந்து மூலம் ராமேசுவரம் அனுப்பி வைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com