கோயில் திருவிழா நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்: 7 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே சனிக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பினா் மோதிக் கொண்டது தொடா்பாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

திருப்பாச்சேத்தி காவல் சரகம் பச்சேரி கிராமத்தில் உள்ள கோயிலில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த கோயில் திருவிழாவை நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டனா். அப்போது கூட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதுதொடா்பாக ரமேஷ், அழகா் ஆகியோா் தனித்தனியாக திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் இரு தரப்பையும் சோ்ந்த 7 போ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com