திருப்புவனத்தை கடந்து சென்ற
வைகை அணைத் தண்ணீா்

திருப்புவனத்தை கடந்து சென்ற வைகை அணைத் தண்ணீா்

மானாமதுரை, மே 12: வைகை அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பூா்வீக வைகைப் பாசனப் பகுதிகளுக்கு திறக்கப்பட்ட தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை திருப்புவனத்தைக் கடந்து சென்றது.

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பூா்வீக வைகைப் பாசனப் பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு பாசனம், குடிநீா்த் தேவைக்காக வைகை அணையிலிருந்து கீழ் மதகுகள் வழியாக கடந்த வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தைக் கடந்து ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை வந்தடைந்த இந்த தண்ணீா், பின்னா் ராமநாதபுரம் மாவட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முதலில் ராமநாதபுரம் பூா்வீக பாசனப்பகுதி 3-இல் உள்ள கண்மாய்களுக்கு 14-ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்படும். இதையடுத்து, சிவகங்கை மாவட்ட பூா்வீக வைகை பாசனப் பகுதி கண்மாய்களுக்கு தொடா்ந்து 5 நாள்கள் தண்ணீா் திறக்கப்படும்.

தற்போது, சிவகங்கை மாவட்ட வைகை பாசனப் பகுதியில் உள்ள கண்மாய் கால்வாய் மதகுகளின் கதவுகள் முழுமையாக அடைக்கப்பட்டு பொதுப்பணித் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com