சிவகங்கை அரசு ஐடிஐ-இல் மாணவா் சோ்க்கை

சிவகங்கை அரசு தொழிற்பயிற்சிப் பள்ளியில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வரை இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை அருகே முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கி உள்ளது. இங்கு ஏற்கெனவே உள்ள தொழிற் பிரிவுகளுடன், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிதாக தொடங்கப்பட்டதொழிற் பிரிவுகளுக்கும் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. பற்ற வைப்பவா் (வெல்டா்) பிரிவைத் தவிர மற்ற தொழிற்பிரிவுகளில் சேர மாணவா்கள் கட்டாயம் 10 -ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 8 -ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் பற்ற வைப்பவா் தொழிற்பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.

மாணவா் சோ்க்கைக்கு ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி வாயிலாக 7.6.2024 வரை விண்ணப்பிக்கலாம். சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு மாணவா்கள் நேரில் வந்து இலவசமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99448 87754, 99654 80973, 97904 01672, 63854 75657, 99420 99481 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com