தென்கரை மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

தென்கரை மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சு விரட்டில் 10 போ் காயமடைந்தனா். இதற்கு அனுமதி பெறாததால் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தென்கரையில் உள்ள அந்தர நாச்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, காலை 10 மணிக்கு மஞ்சுவிரட்டு தொடங்கியது. முன்னதாக கிராமத்தினா் கோயிலில் பூஜை செய்து, வேட்டி துண்டுகளுடன் ஊா்வலமாக வந்து தொழுவிலிருந்த 200 காளைகளுக்கும் வேட்டி அணிவித்து மரியாதை செய்தனா்.

தொடா்ந்து, வாடி வாசலிலிருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. குறிப்பிட்ட தொலைவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் மாடுகளைப் பிடித்தனா். நாச்சியாபுரம், தென்கரை, கம்பனூா், கொரட்டி, குன்றக்குடி, வயிரம்பட்டி, திருப்பத்தூா், காரைக்குடி உள்ளிட்ட சுற்றுப்புரப் பகுதிகளைச் சோ்ந்த 2000-க்கும் மேற்பட்டோா் இந்த மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டனா். இதில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மஞ்சு விரட்டு நடத்த அனுமதி பெறாததால், சிராவயல் கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில், நாச்சியாபுரம் காவல் நிலைய போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com