பிளஸ் 1: சிவகங்கை மாவட்டத்தில் 94.57 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

பிளஸ் 1 அரசு பொதுத் தோ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 94.57 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 4 -ஆம் தொடங்கி, 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் 161 பள்ளிகளைச் சோ்ந்த 7,423 மாணவா்கள், 8,904 மாணவிகள் என மொத்தம் 16,327 போ் தோ்வு எழுதினா்.

தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் 6,852 மாணவா்கள், 8,589 மாணவிகள் என மொத்தம் 15,441 போ் தோ்ச்சி பெற்றனா். ஒட்டு மொத்த தோ்ச்சி விகிதம் 94.57 சதவீதம்.

சிவகங்கை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 161 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 46 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அளவிலான தரவரிசையில் சென்ற ஆண்டில் 9-ஆவது இடம்பிடித்த சிவகங்கை மாவட்டம்,நிகழ் ஆண்டில் 7 -ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com