காரைக்குடியில் மே 19- இல் கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையே 14 வயதுக்குள்பட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு, சிவகங்கை மாவட்ட அணி வீரா்கள் தோ்வு வருகிற 19-ஆம் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி ’ஆ’ வலைப் பயிற்சி மைதானத்தில், அன்றைய தினம் காலை 7 மணிக்கு நடை பெறவிருப்பதாக மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ளும் வீரா்கள் 1.9.2010 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். வயதுச் சான்றிதழ் நகல் கொண்டு வரவேண்டும்.

வெள்ளைச்சீருடை, ஷு, கிரிக்கெட் உபகரணங்களைத் தாங்களே கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94439-78488, 70103-25125 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கிரிக்கெட் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com