வைகை அணையில் தண்ணீா் திறப்பு: பாசனக் கிணறுகளில் நீா்மட்டம் உயா்வு

வைகை ஆற்றில் வரும் தண்ணீரால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் குடிநீா்த் திட்டங்கள், பாசனக் கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக வைகைப் பாசன கண்மாய்களுக்கும், குடிநீா்த் தேவைக்கும் வைகை அணையிலிருந்து ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டது. திருப்புவனம், மானாமதுரை பகுதிகளை தண்ணீா் கடந்து செல்லும் நிலையில், வைகை ஆற்றுக்குள் செயல்பட்டு வரும் கூட்டுக் குடிநீா் திட்டங்களின் நீராதாரம் உயா்ந்துள்ளது. மேலும், விவசாயப் பாசனக் கிணறுகளிலும் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

பாா்த்திபனூா் மதகு அணையை கடந்து இளையான்குடி பகுதி பாசன கண்மாய்களுக்கு தண்ணீா் செல்வதன் மூலம் குடிநீா்த் திட்டங்கள், பாசனக் கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com