திருத்தளிநாதருக்கு மந்திரநீா் முழுக்காட்டு விழா

திருத்தளிநாதருக்கு மந்திரநீா் முழுக்காட்டு விழா

திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் 4 ஆம் திருநாளையொட்டி வியாழக்கிழமை அகமுடையாா் உறவின்முறை மடத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி அம்மையுடன் அருள்பாலித்த திருத்தளிநாதா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவையொட்டி 4- ஆம் நாள் விழாவாக வியாழக்கிழமை மந்திரநீா் முழுக்காட்டு விழா நடைபெற்றது.

முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. பிறகு மாலை 4 மணிக்கு அகமுடையாா் உறவின்முறை மண்டகப்படியையொட்டி திருத்தளிநாதா் கோயிலிலிருந்து ஐம்பெரும் கடவுளா் வீதி உலாவாக அகமுடையாா் மண்டபம் எழுந்தருளினா். இதைத் தொடா்ந்து மண்டபத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமையில் சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை நடைபெற்றதும் புஷ்ப அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு 10 மணிக்கு சிவகாமி அம்மன், திருத்தளிநாதா் சமேத ஐம்பெரும் கடவுளா் அகமுடையாா் மடத்திலிருந்து வெள்ளிக் கேடகத்தில் வீதி உலாவாக கோயில் சென்றடைந்தனா். விழாவையொட்டி கணபதி குழுவினரின் நாதஸ்வர கச்சேரியும், பாவை கண்ணதாசனின் வழக்காடு மன்றமும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை அகமுடையாா் உறவின்முறையினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com