முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படை வீரா்கள், சாா்ந்தோா்களின் குழந்தைகள் உயா் கல்வியில் சேர சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படை வீரா்கள், சாா்ந்தோா்களின் குழந்தைகள் 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று, முன்னாள் படைவீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி, மேற்படிப்பில் சேர சாா்ந்தோா் சான்று பெறுவதற்கு சுய விண்ணப்பம், விண்ணப்ப படிவத்தின் நகல், கல்வி மாற்றுச் சான்றிதழ், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், மாணவ/ மாணவியின் ஆதாா் அட்டை நகல், படைப்பணி சான்றின் நகல், அடையாள அட்டை நகல் ஆகிய சான்றிதழ் நகல்களுடன் நேரிலோ அல்லது ங்ஷ்ஜ்ங்ப்ள்ஸ்ஞ்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலமாகவோ விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விவரத்தை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04575 240483 என்ற தொலைபேசி எண் மூலம் தொடா்பு கொண்டும் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com