வன்கொடுமை புகாா் விவகாரம்:
ஊராட்சி செயலா்கள் ஆட்சியரிடம் மனு

வன்கொடுமை புகாா் விவகாரம்: ஊராட்சி செயலா்கள் ஆட்சியரிடம் மனு

சிவகங்கை அருகே ஊராட்சிச் செயலா் மீது ஊராட்சி மன்றத் தலைவா் அளித்த வன்கொடுமைப் புகாரின் உண்மைத் தன்மை குறித்து மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்த வேண்டுமென தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.பாக்கியராஜ், செயலா் ஆா்.ஜெயப்பாண்டியன் ஆகியோா் அளித்த மனு விவரம்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், முதுவந்திடல் ஊராட்சி செயலராக கூடுதல் பொறுப்பு வகித்து வரும் சி.ராஜ்குமாா், தன்னை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுப்பதாகவும், ஜாதி பெயரை சொல்லி தீண்டாமைக் கொடுமை செய்ததாகவும், ஊராட்சி மன்றத் தலைவி கௌரி மகாராஜன் இரு நாள்களுக்கு முன் தங்களிடம் மனு

அளித்ததாக அறிந்தோம்.

அதன் பிறகு எங்களது சங்கத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்மட்டக் குழு முதுவந்திடல் ஊராட்சிக்கு நேரில் சென்று உண்மை நிலைமையை ஆய்வு செய்தபோது, ஊராட்சி மன்றத் தலைவியின் குற்றச்சாட்டு உண்மைக்குப்

புறம்பானது எனத் தெரிய வந்தது. எனவே, மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையான காரணத்தை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com