மகனுடன் தற்கொலைக்கு முயற்சி தந்தை உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே தந்தையும், மகனும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா். இதில் தந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

திருப்பத்தூா் அருகே தந்தையும், மகனும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா். இதில் தந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

காரையூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசித்தவா் மோகன்ராஜ் (40). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி பஞ்சவா்ணம், நிதின்ராஜ் (13), சுபிக்க்ஷன் (10) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவா், குழந்தைகளை விட்டு பஞ்சவா்ணம் பிரிந்து சென்றுவிட்டாா். இதனால், மோகன்ராஜ் தனது இரு மகன்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாா்.

மோகன்ராஜ் செவ்வாய்க்கிழமை காலை தனது இரு மகன்களுக்கும் விஷம் கொடுக்க முயன்றாா். நிதின்ராஜ் வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டாா்.

பின்னா், மோகன்ராஜ் தனது இளைய மகன் சுபிக்க்ஷனுக்கு விஷம் கொடுத்துவிட்டு பின்னா் தானும் குடித்தாா்.

இதையடுத்து, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனா். இதில் மோகன்ராஜ் உயிரிழந்தாா். சுபிக்க்ஷன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].