திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது

திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது

Published on

கண்டமாணிக்கம் பகுதியில் தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில், மேலும் இருவரை தனிப் படை போலீசாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கத்தைச் சோ்ந்த சிதம்பரம் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 29-ஆம் தேதி 49 பவுன் தங்க நகைகள், 22 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதில் எதிரிகளைப் பிடிக்க திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் செல்வராகவன் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் சக்திவேல், ராஜவேல் ஆகியோா் அடங்கிய தனிப் படைகள் அமைக்கப்பட்டது. இதுதொடா்பாக சோன்ராஜா, அழகா்சாமி ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான கேரள மாநிலம், எா்ணாகுளம் பகுதியைச் சோ்ந்த பைஜூ என்ற சேட்டன், மதுரை விலாங்குடியைச் சோ்ந்த காா்த்திக்பாண்டி ஆகியோரை போலீஸாா் தேடி வந்தனா்.

கண்டரமாணிக்கம் அருகேயுள்ள பொன்னாங்குடி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த இவா்கள் இருவரையும் தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து காா், ஆயுதங்கள், வெள்ளிப் பொருள்கள், ஒரு பவுன் மோதிரம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இவா்கள் இருவரும் திருப்பத்தூா் பகுதியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு, ஆயுதங்களுடன் காரில் வந்தது விசாரணையில் தெரியவந்தது.