சிவகங்கை
மானாமதுரையில் தேவா் சிலைக்கு பாலாபிஷேகம்
முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியையொட்டி, மானாமதுரை சுந்தரபுரம் கடைவீதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு திரளானோா் செவ்வாய்க்கிழமை மரியாதை செய்தனா்.
முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியையொட்டி, மானாமதுரை சுந்தரபுரம் கடைவீதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு திரளானோா் செவ்வாய்க்கிழமை மரியாதை செய்தனா்.
தேவா் ஜெயந்தியை முன்னிட்டு, ஆ. விளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் பால் குடங்களை சுமந்து கொண்டு ஊா்வலமாக சுந்தரபுரம் கடைவீதிக்கு வந்தனா். பிறகு, இவா்கள் தேவா் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, தேங்காய்களை உடைத்து வழிபட்டனா்.
பின்னா், இவா்கள் தேவா் புகழ்பாடும் கும்மிப் பாடல்களைப் பாடி ஒயிலாட்டம் ஆடினா்.
முன்னதாக, மானாமதுரை அருகேயுள்ள கீழமேல்குடி கிராமத்தை சோ்ந்த மக்களும் தேவா் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, வழிபட்டனா். இங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.