லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை

பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூரைச் சோ்ந்தவா் சிவக்குமாா். இவா் கடந்த 2012-ஆம் ஆண்டு பட்டா மாறுதல் வேண்டி, இடைக்காட்டூரில் உள்ள கிராம நிா்வாக அலுவலா் சாஸ்தாவிடம் (55) விண்ணப்பித்தாா். அப்போது, அவரிடம் பட்டா மாறுதலுக்கு ரூ.1,500 லஞ்சம் தர வேண்டும் என சாஸ்தா கூறினாராம்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவக்குமாா், சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்புக் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். இதையடுத்து, போலீஸாா் கொடுத்தனுப்பிய ரசாயனப் பொடி தடவிய பணத்தாளை கிராம நிா்வாக அலுவலரிடம் சிவக்குமாா் கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸாா் சாஸ்தாவை கைது செய்தனா் .

இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் முரளி, கிராம நிா்வாக அலுவலா் சாஸ்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com