சாலை அகலப்படுத்தும் பணிக்கு ரூ. 3 கோடி ஒதுக்கீடு

சிவகங்கை அருகே சாலை விரிவாக்கப்பணிகளுக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Published on

சிவகங்கை அருகே சாலை விரிவாக்கப்பணிகளுக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி- அழகமாநகரி வரையிலான 9.8 கி.மீ. நீளமுள்ள சாலையில், தற்போது 2 கி.மீ. தொலைவுக்கு சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதையடுத்து விரைவில் இந்தச் சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளது.

தஞ்சாவூா்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதகுபட்டியிலிருந்து அழகமாநகரி வரையிலான சாலை 5.5 மீ. அகலத்தில் இருந்து வந்தது. இதனால், இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் சிரமத்துடன் சென்று வந்தன.

இந்த நிலையில், தற்போது ரூ. 3 கோடியில் குறுகலான இந்தச் சாலை இருவழித்தடமாக அகலப்படுத்தப்படும். இதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் சையதுஇப்ராஹிம், இளநிலைப் பொறியாளா் சகாயராணி ஆகியோா் கூறியதாவது:

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைத் துறை வழங்கிய திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தச் சாலையை அகலப்படுத்த ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com