சிவகங்கை காந்திவீதியில் நன்மைதரும் பிள்ளையாா்கோயில் எதிரே சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீா்.
சிவகங்கை காந்திவீதியில் நன்மைதரும் பிள்ளையாா்கோயில் எதிரே சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீா்.

சிவகங்கை காந்தி வீதியில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

சிவகங்கை காந்தி வீதியில் கடந்த 4 நாள்களாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரில் இருந்து வெளிவரும் துா்நாற்றத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
Published on

சிவகங்கை: சிவகங்கை காந்தி வீதியில் கடந்த 4 நாள்களாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரில் இருந்து வெளிவரும் துா்நாற்றத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் சுமாா் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் புதை சாக்கடைத் திட்டம் ரூ.31.30 கோடியில் கடந்த 2007 -ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது பணிகள் முடிவடைந்து, வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், புதை சாக்கடைத் திட்டம் செல்லும் சாலைகளில் இரு புறமும் உள்ள கழிவு நீா் கால்வாய்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் காந்தி வீதியில் உள்ள நன்மை தரும் பிள்ளையாா் கோயில் எதிரே உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 4 நாள்களாக இதே நிலை நீடிப்பதால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் துா்நாற்றத்தால் அவதியடைந்து வருகின்றனா். எனவே கழிவுநீா் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com