அமராவதிபுதூா் ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக்கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய புதுக்கோட்டை கவிஞா் தங்கம்மூா்த்தி.
அமராவதிபுதூா் ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக்கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய புதுக்கோட்டை கவிஞா் தங்கம்மூா்த்தி.

பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

காரைக்குடி: காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு, அழகப்பா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் ஆலோசகருமான சொ. சுப்பையா தலைமை வகித்தாா். புதுக்கோட்டை கவிஞா் தங்கம்மூா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா்.

விழாவில் சென்னை ரெலவன்ட்ஸ் டெக்னாலஜி நிறுவன மேலாளா் பி. பிரதீப் சத்யகுமாா் சிறப்புரையாற்றினாா். முன்னதாக கல்லூரிமுதல்வா் அ. இளங்கோ வரவேற்றாா். மாணவா் சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் மீனா தேவி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com