இமானுவேல்சேகரன் நினைவு நாள்: பள்ளி, கல்லூரிகளுக்கு செப்.11-ல் விடுமுறை
பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 67-ஆவது நினைவு நாளையொட்டி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள், ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்களுக்கு வருகின்ற 11-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இமானுவேல் சேகரன் 67-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி அமைதியாக நடைபெறவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், மாணவ, மாணவிகளின் நலன் கருதியும் வருகின்ற 11-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள் மற்றும் ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதற்கு பதிலாக வருகிற 21-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள் செயல்படும். மேலும், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்துக்கு வருகிற 11-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுகிறது என்றாா் அவா்.