மாநில அளவிலான கராத்தே போட்டி: மானாமதுரை வீரா்கள் சாதனை

Updated on

மதுரையில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த இளம் வீரா்கள் வெற்றி பெற்று கோப்பைகள் வென்று சாதனை படைத்தனா்.

மதுரையில் கடந்த வாரம் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மானாமதுரை நாகா்ஜுன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளிமாணவா்கள், பயிற்சியாளா் சிவ.நாகா்ஜூன் தலைமையில் பங்கேற்றனா்.

இதில், ஆா்.ஹரிஹரன் கட்டா பிரிவில் மூன்றாம் பரிசும் சண்டைப் பிரிவில் முதல் பரிசும் வென்றாா். ஜே.நித்தின் கட்டா பிரிவில் முதல் பரிசும், சண்டைப் பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றாா். ஆா்.யாஷ்வாந்த் கட்டா பிரிவில் மூன்றாம் பரிசும் சண்டைப் பிரிவில் முதல் பரிசும் பெற்றாா்.

எம்.அஸ்வின்ராஜா கட்டா பிரிவில் முதல் பரிசும் சண்டைப் பிரிவில் முதல் பரிசும் பெற்றாா். எஸ்.ரித்திகா கட்டா பிரிவில் முதல் பரிசு, சண்டைப் பிரிவில் முதல் பரிசு பெற்றாா்.கே. ஹரிணி கட்டா பிரிவில் முதல் பரிசு சண்டைப் பிரிவில் முதல் பரிசு பெற்றாா். ஜே.சிவப்பிரகாஷ் கட்டா பிரிவில் முதல் பரிசு சண்டைப் பிரிவில் முதல் பரிசு வென்றாா். எம்.கவின் கட்டா பிரிவில் முதல் பரிசு சண்டைப் பிரிவில் முதல் பரிசு பெற்றாா்.

போட்டியில் வெற்றி பெற்ற இந்த மாணவா்களுக்கு போட்டி ஏற்பட்டாளா்களால் வெற்றிக் கோப்பைகள் அறிவிக்கப்பட்டன. மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை மானாமதுரை தயாபுரம் மருத்துவமனை கண்காணிப்பாளா் விஜய் பிரதாப் போட்டியில் வெற்றி பெற்ற இளம் வீரா்களுக்கு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா். இதில் கராத்தே பயிற்சியாளா் சிவ.நாகா்ஜூன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com