
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே இரு சக்கர வாகனமும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
மருதிப்பட்டியைச் சோ்ந்தவா் வீரைய்யா (68). இதே ஊரைச் சோ்ந்தவா் சின்னக்கருப்பன் (65). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சிவபுரிபட்டி கோயிலில் திருமண நிகழ்வுக்கு சென்றனா். இவா்களுக்குப் பின்னால் திருப்பத்தூரிலிருந்து சிங்கம்புணரி நோக்கி வந்த அரசு நகரப் பேருந்தை கவனிக்காமல் சிவபுரிபட்டி விலக்கு சாலையில் திரும்பிய போது பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். பேருந்து, அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியது. காயமடைந்த இருவரும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.