பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
Published on

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்தவா் தண்ணாயிரமூா்த்தி. இவா் மீது மாணவா்களிடம் பணம் வசூலித்தது, இவா் திட்டியதால் ஆசிரியை தற்கொலைக்கு முயன்றது உள்ளிட்ட புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, கொம்புக்காரனேந்தல் கிராமமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து, தலைமையாசிரியா் தண்ணாயிர மூா்த்தியை சிங்கம்புணரி அருகே உள்ள முறையூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து உத்தரவிட்டாா்.

மேலும் தலைமையாசிரியா் மீதான குற்றச்சாட்டு குறித்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில் சிவகங்கை கோட்டாட்சியா் விஜயகுமாா் பள்ளி ஆசிரியா்கள், கிராம மக்களிடம் விசாரணை நடத்தினாா்.

இந்த நிலையில், தலைமையாசிரியா் தண்ணாயிர மூா்த்தியை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com