திருப்புவனம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ.16.52 கோடியில்  மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா் திட்ட வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் லால்வேனா.
திருப்புவனம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ.16.52 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா் திட்ட வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் லால்வேனா.

அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

Published on

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 16.52 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா் வளா்ச்சித் திட்டப் பணிகளை உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆா்.லால்வேனா வியாழக்கிழமை மாலை கள ஆய்வு செய்தாா்.

பின்னா், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மடப்புரம் கிராமத்தில் ரூ 8.40 லட்சத்தில் சமுதாய மயானத்தில் கட்டப்பட்டு வரும் காத்திருப்போா் அறை, சுற்றுச்சுவா் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் தூதை கிராமத்தில் ரூ.18.42 லட்த்தில் கட்டப்பட்டு வரும் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா் தேக்க தொட்டி கட்டுமானப் பணி திருப்பாச்சேத்தி தெற்கு நடுநிலை பள்ளியில் ரூ 98 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு தளங்கள் கொண்ட கூடுதல் வகுப்பறைக் கட்டட கட்டுமானப் பணி ஆகியவற்றையும் லால்வேனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, மழவராயனேந்தல் ஊராட்சிக்கு செம்பராயனேந்தலில் கருணாநிதியின் கனவு இல்லத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் பயனாளியின் இல்ல கட்டுமான பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது, உடனிருந்த துறை அலுவலா்கள் மேற்கண்ட திட்டப் பணிகள் குறித்து கண்காணிப்பாளா் லால்வேனாவிடம் விளக்கிக் கூறினா். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com