சிவகங்கை
வரலாற்றைப் படிக்காமல் வரலாறு படைக்க முடியாது: சீமான்
சிவகங்கை:
சிவகங்கை சிவன்கோயில் அருகே வெள்ளிக்கிழமை நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வரலாறு நம்மை வழிநடத்தும் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியதாவது:
தமிழா் வரலாறு நூறாண்டுகளாக திராவிட வரலாறு என திரிக்கப்பட்டது. 500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு மொழி 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் மொழியை அழிக்க நினைப்பதை ஏற்க முடியாது. வஉசியை விட பெரிய தியாகம் செய்தவா் இந்தியாவில் யாரும் இல்லை. ஆனால் அவரது தியாக வரலாறு மறைக்கப்பட்டது. இது போல மறைக்கப்பட்ட வரலாறுகள் ஓராயிரம் உள்ளன என்றாா் அவா். முன்னதாக, அரண்மனை வாயில் உள்ள வேலுநாச்சியாா் சிலைக்கு சீமான் மாலையணிவித்தாா்.