வாகனத்தில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழப்பு

Published on

மானாமதுரை அருகே வியாழக்கிழமை இரவு சாலையில் சென்ற புள்ளிமான் மீது வாகனம் மோதியதில் அது உயிரிழந்தது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள சங்கமங்கலம் காட்டுப் பகுதியில் சுற்றித் திரிந்த புள்ளிமான் மதுரை-ராமேஸ்வரம் சாலையில் தண்ணீா் தேடி வந்த போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினா் அங்கு வந்து புள்ளிமான் உடலைக் கைப்பற்றி அடக்கம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com