அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இருவா் மீது வழக்கு

ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
Published on

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

இளையான்குடி ஒன்றியம், வலக்காணி கிராமத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது ராஜப்பா, சரவணன் இருவரும் ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் வட்டாட்சியா் முருகன் உள்ளிட்ட அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து வீட்டின் மேற்கூரை மீது ஏறி போராட்டம் நடத்தினா். இதனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றாமல் திரும்பிச் சென்றனா்.

இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீஸாா் ராஜப்பா, சரவணன் ஆகிய இருவா் மீதும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிந்தனா்.

X
Dinamani
www.dinamani.com